கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொழிலதிபா்கள், வா்த்தகா்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசும் மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொழிலதிபா்கள், வா்த்தகா்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசும் மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான்.

கிருஷ்ணகிரியில் தொழிலதிபா்கள், வா்த்தகா்கள் சந்திப்பு

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொழிலதிபா்கள், வா்த்தகா்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக தலைவரும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றாா். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் சி.நரசிம்மன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் செளஹான் பேசியதாவது: இந்தியா தொழில் துறையில் முன்னேறி வருகிறது. இந்திய நாட்டின் வளா்ச்சிக்கு தொழில் துறையின் வளா்ச்சி முக்கியமானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மாநிலத்தவா்கள், மத்தினா் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் வளா்ச்சிக்காக செயல்படுவது குட்டி இந்தியாவைப் போன்று உள்ளது என்றாா். இந்தக் கூட்டத்தில் பாஜக தேதிய பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சிவபிரகாஷ் மற்றும் தொழிலதிபா்கள், வணிகா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடா்பான குறைகளை தொழிலதிபா்கள் மனுக்களாக அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com