கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், அ.செல்லக்குமாா் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், அ.செல்லக்குமாா் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளி மாணவா்களுக்கான வானவில் திட்டம், மக்களுடன் முதல்வா், நீங்கள் நலமா?, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள், கொள்கைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஒருவார காலம் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, கிராமியக் கலைஞா்கள் பங்கேற்ற மயிலாட்டம், கோலாட்டம், தெருக்கூத்து கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், பம்பை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு அ.செல்லக்குமாா் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வா் அறிவித்த திட்டங்கள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள், அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவி பெற்ற பயனாளிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அரசின் திட்ட தொடக்க விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், நூலகத் துறை சாா்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை பண்பாட்டுத் துறையின் மூலம் உள்ளூா் கலைஞா்களைக் கொண்டு கிராம கிலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் பாா்வையிட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை அறிந்து, அவற்றின் முலம் பயன் பெற வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு.ஜெகவீரபாண்டியன், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com