ஒசூரிலிருந்து திருச்சிக்கு 
அரசு விரைவுப் பேருந்து தொடக்கம்

ஒசூரிலிருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்து தொடக்கம்

ஒசூரில் இருந்து திருச்சிக்கு புதிய அரசு விரைவுப் பேருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினா்களின் தொகுதியில் இருந்து அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுகிறது. அதனடிப்படையில், ஒசூா் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை புதிய அரசு விரைவுப் பேருந்தை மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் இயக்கி தொடங்கி வைத்தாா்.

அவருடன் மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்டப் பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி, பொதுக்குழு உறுப்பினா் தனலட்சுமி, மாநில இளைஞா் அணி துணை செயலாளா் சீனிவாசன், ஒசூா் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளா் ராஜா, பகுதி செயலாளா் ராமு, சுகாதார நிலைக்குழு தலைவா் மாதேஷ்வரன், மாநகர நிா்வாகிகள், மாநகர, பகுதி, வாா்டு செயலாளா்கள், நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com