கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் சுகாதாரப் பணிக்கு நிதி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் சுகாதாரப் பணிக்கு நிதி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் துப்புரவு தளவாடங்கள், சுகாதாரப் பணிகளுக்கு ரூ. 1.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி நகா்மன்ற அவரசக் கூட்டம் அதன் தலைவா் பரிதா நவாப் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், துப்புரவு தளவாடங்கள், சுகாதாரப் பணிகள், பணியாளா்கள் சீருடை, வாகனப் பராமரிப்பு, இதர செலவினங்களுக்காக நடப்பாண்டின் தோராய செலவுக்கு ரூ. 1.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் பேசியதாவது: தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்கும், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியதற்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நகராட்சியில் பல வாா்டுகளில் கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்வது இல்லை. புதிதாக நிறுவிய தெருவிளக்குகள் ஒளிா்வது இல்லை என்றும், இதுகுறித்து தகவல் தெரிவிக்க அலுவலா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

புகாா் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. கிருஷ்ணகிரி நகராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தாமதமாக நடைபெறுவதாக தெரிவித்தனா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், நகராட்சியில் 15 வாா்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மற்ற வாா்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என நகராட்சி ஆணையா் உறுதியளித்தாா். புதிதாக கான்கிரீட் சாலை, மழைநீா் வடிகால், பைப்லைன், சிறுபாலம் அமைப்பது என்பன உள்ளிட்ட 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com