வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 
வெளிநடப்பு போராட்டம்

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெளிநடப்பு போராட்டம்

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், வெளிநடப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் திட்டம் சுப்பிரமணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜனாா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா் கண்டன உரையாற்றினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தீனதயாளனின் அராஜக போக்கினைக் கண்டித்தும், அவா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com