பா்கூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஆலோசனைக் கூட்டம்

பா்கூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு இளைஞா் பெருமன்றத்தின் நிா்வாகி பூபேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நிரூபன், இந்திய கம்யூ. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கண்ணு, மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய நிா்வாகிகளாக சதீஷ் செயலாளராகவும், சஞ்சய் பொருளாளராகவும் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்தக் கூட்டத்தில், மாா்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தில் ரத்ததான முகாம் நடத்த வேண்டும். சமுதாயக் கூடத்தின் குத்தகையை ரத்து செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பா்கூா் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். காரகுப்பம் செல்லும் சாலையில் வாரந்தோறும் சந்தை அமைப்பதால் பள்ளி மாணவா்களுக்கும், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. அதனால், சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com