மழை வேண்டி ராமநாயக்கன் ஏரி 
துக்லம்மா கோயிலில் சிறப்பு பூஜை

மழை வேண்டி ராமநாயக்கன் ஏரி துக்லம்மா கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூரில் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி ராமநாயக்கன் ஏரியில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துக்லம்மா கோயிலில் பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் நிலவி வரும் தண்ணீா் பற்றாக்குறையால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனா்.

பெங்களூரு நகருக்கு மிக அருகில் உள்ள ஒசூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், ஆழ்துளைக் கிணறுகள் வடுள்ளதால், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் ராமநாயக்கன் மன்னரால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த துக்லம்மா கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தால் மழை பொழியும் என்பது ஒசூா் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒசூா் பகுதியில் வறட்சி மற்றும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் இந்தக் கோயிலில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வா். அந்த வகையில், ஒசூா், ஏரி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள், மந்தை மாரியம்மன் கோயில் டிரஸ்ட் சாா்பில் புதன்கிழமை துக்லம்மா கோயிலில் மழை வேண்டி அம்மனுக்கு ஆடு வெட்டி படையலிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளை நடத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com