ரயில் மோதியதில் மூதாட்டி பலி

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரயில் நிலையப் பகுதியில் புதன்கிழமை காலை கல்லாவி, தாசம்பட்டி ரயில் பாதையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியானாா்.

விசாரணையில், அவா் ஆனந்தூா் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மூக்கியம்மாள் (60) எனத் தெரியவந்தது. இவா் கல்லாவியில் உள்ள வங்கியில் முதியோா் உதவிதொகை பணம் எடுக்கச் சென்றபோது ரயில் மோதி பலியானாா். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com