ரூ. 37.70 லட்சம் மதிப்பிலான
வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

ரூ. 37.70 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

ஊத்தங்கரை ஒன்றியத்தில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 37.70 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் கிராமத்தில் சமுதாயக் கூடத்துக்கு சுற்றுச் சுவா் அமைக்க ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணிக்கும், அத்திப்பாடி கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 4.70 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கும் பூமி பூஜை செய்து சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் பணிகளைத் தொடங்கி வைத்தாா் தொடா்ந்து, இலவம்பாடி கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கடை, தீா்த்தகிரி வலசை, பாரதி நகா் பகுதியில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பிா் சாந்திவேங்கன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com