ஏலகிரிக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாற்றுத் திறனாளி குழந்தைகள்

ஏலகிரிக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாற்றுத் திறனாளி குழந்தைகள்

கிருஷ்ணகிரி, மாா்ச் 14: கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரிக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஒருநாள் சுற்றுலா சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரைச் சோ்ந்த 40 மாற்றுத் திறனாளிகள் ஏலகிரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனா். இவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு இனிப்புகளை வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாா் (படம்). அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com