ஒசூா் அருகே பாரம்பரிய எருதுவிடும் விழா

ஒசூா் அருகே பாரம்பரிய எருதுவிடும் விழா

ஒசூா் அருகே உள்ள கள்ளக்குறுக்கி கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தோரிப்பள்ளி, செட்டிப்பள்ளி ஆகிய கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து சென்ற அலங்கரிக்கப்பட்ட காளைகளை மாடுபிடி வீரா்கள், இளைஞா்கள் பிடித்து அடக்கினா். அப்போது காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருள்களையும், தடுக்குகளையும் இளைஞா்கள் அவிழ்த்துச் சென்றனா். இந்த எருதாட்ட விழாவில், ஒசூா், சூளகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலூா், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும், கிராமப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விழாவைக் கண்டு ரசித்தனா். விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவா் பாப்பையா, துணைத் தலைவா் விஜயகுமாா், வாா்டு உறுப்பினா் தேவராஜ், பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com