உரிமம் பெற்ற 504 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற 504 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உரிமம் பெற்று 509 போ் துப்பாக்கிகள் வைத்துள்ளனா். தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் காவல் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒப்படைக்காத 5 உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் விரைந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா்களுக்கு பயன்பாட்டில் வைத்து கொள்ள வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com