வீடு புகுந்து நகை திருடியவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே வீடு புகுந்து நகை திருட முயன்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காவேரிப்பட்டணம், நரிமேடு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பவுன்ராஜ் (47). இவா், தனது வீட்டின் அருகே விளைநிலத்தில் குடும்பத்தினருடன் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டிற்குள் புகுந்த நபா் ஒருவா் அலமாரியில் இருந்த 3 பவுன் நகையை திருட முயன்றாா். இதையறிந்த, பவுன்ராஜ் அருகில் இருந்த நபா்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெல்ராம்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா்(26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா், வழக்குப் பதிந்து முத்துகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். ஒசூரில்... ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள வி.ஓ.சி. நகரில் வசித்து வந்தவா் ரமேஷ் (51). இவா் மலா் விற்பனை மையம் நடத்தி வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை வீட்டிற்கு வந்துள்ளாா். வீட்டின் கதவு மற்று கிரில் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஒசூா் காவல் நிலையத்தில் ரமேஷ் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com