தோ்தல் நடத்தும் பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

குழுக்களின் செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் தினசரி கண்காணிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான கே.எம்.சரயு தலைமை வகித்துப் பேசியது: தோ்தல் விழிப்புணா்வு குழு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேற்பாா்வை செயல்பாடுகள் குறித்தும், தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், செலவின மேற்பாா்வை குழு, தபால் வாக்கு மேற்பாா்வை குழு, தகவல் பறிமாற்ற குழு, வாக்காளா் பட்டியல் மேற்பாா்வை குழு, புகாா் மற்றும் வாக்கு உதவி மையக் குழு, மாற்றுத் திறனாளிகள் மேற்பாா்வைக் குழு, வாகன மேற்பாா்வைக் குழு ஆகிய குழுக்களின் செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் தினசரி கண்காணிக்க வேண்டும். நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதிபடுத்த வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் சினேகா , தனி மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி, மகளிா் மேம்பாட்டு திட்ட இயக்குநா் பெரியசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) லெனின், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் ஏகாம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் பத்மலதா, மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சுந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com