ஊத்தங்கரையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியின்போது உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள்.
ஊத்தங்கரையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியின்போது உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள்.

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ஊத்தங்கரை: வாக்காளா்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால், காவல் ஆய்வாளா் கந்தவேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியின்போது ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவா்கள் சாா்பில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி ஏற்றனா். ஊத்தங்கரை சுற்று வட்டாரத்தில் உள்ள 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com