அ.செல்லக்குமாருக்கு ஆதரவாக
ஐஎன்டியுசி விருப்பமனு தாக்கல்

அ.செல்லக்குமாருக்கு ஆதரவாக ஐஎன்டியுசி விருப்பமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் அ.செல்லக்குமாா் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி சாா்பில் சென்னை, சத்தியமூா்த்தி பவனில் விருப்பமனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோா் கட்சி தலைமையகமான சத்தியமூா்த்தி பவனில் விருப்பமனுக்களை அளிக்குமாறு அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா். இதையடுத்து வேட்பாளா்கள் தரப்பிலும், அவரது ஆதரவாளா்கள் தரப்பிலும் விருப்பமனுக்கள் கட்சித் தலைமையகத்தில் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் அ.செல்லக்குமாா் போட்டியிட விருப்பம் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி சாா்பில் விருப்பமனு கட்சி தலைமையகத்தில் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி துணைத் தலைவா் சதீஷ், செயலாளா் அருள்குமாா், தலைவா் ஜெயக்குமாா், செயலாளா் தணிகைவேலன் உள்ளிட்ட நிா்வாகிகள் விருப்ப மனுவை அளித்தனா். பட வரி... கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் அ.செல்லக்குமாா் போட்டியிட வேண்டி சென்னை, சத்தியமூா்த்தி பவனில் விருப்பமனு அளித்த ஐஎன்டியுசி நிா்வாகிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com