கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மக்களவை தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காவல் துறையினா் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்கான தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (மாா்ச் 20) தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவா்களை போலீஸாா் மெடல் டிடெக்டா் மூலம் பரிசோதித்து அனுப்புகின்றனா்.

அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில் ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் 200 மீ., 100 மீ., ஆட்சியா் அலுவலக நுழைவாயில் என மூன்று இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதுபோல கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோட்டாட்சியா் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், 100 மீட்டா் தொலைவிலும், அலுவலகம் நுழைவாயிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com