மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்திய இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குநா் சரவணன் தலைமையிலான அலுவலா்கள், கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சுங்க வசூல் மையம் அருகே நின்ற இரு லாரிகளை செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அந்த லாரிகளில் மண் கடத்துவது தெரியவந்த்து. இதையடுத்து, அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மண்ணுடன் இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com