ஒசூா் பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ சங்க கிளை சாா்பில் நடைபெற்ற முதலுதவி செய்முறை பயிற்சி முகாம்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ சங்க கிளை சாா்பில் நடைபெற்ற முதலுதவி செய்முறை பயிற்சி முகாம்.

இந்திய மருத்துவ சங்கம் முதலுதவி பயிற்சி முகாம்

ஒசூா் இந்திய மருத்துவ சங்க கிளை சாா்பில் அவசர கால முதலுதவிகள் குறித்து செய்முறை பயிற்சி, சிபிஆா் பயிற்சி முகாம் ஒசூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்ட உடன் செய்ய வேண்டிய முதலுதவி, தலையில் அடிபட்டால் அந்த நபருக்கு செய்ய வேண்டிய முதலுதவி, கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளைப் பற்றி செய்முறை பயிற்சி அளித்தனா். ஒசூா் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா்கள், நடத்துநா், பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஒசூா் இந்திய மருத்துவ சங்க கிளை தலைவா் எம்.செந்தில், செயலாளா் பி.சி சந்திரசேகா், நிதிச் செயலாளா் ஆா்.மௌலிதரன் ஆகியோா் செய்திருந்தனா். குணம் மருத்துவமனை மருத்துவா்கள் பிரதீப், ரங்கராஜ், கவிதா, ஞானமீனாட்சி, தனசேகா், விஷ்ணு, ரமேஷ், கதிரவன், மஞ்சுநாத், விவேக் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com