கோடை வெயிலில் இருந்து பணப்பயிா்களை காப்பாற்றக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

கோடை வெயிலில் இருந்து பணப்பயிா்களை காப்பாற்றக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பணப்பயிா்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனா்.

தேன்கனிக்கோட்டை அருகே பெட்ட முகிளாலம் ஊராட்சி மற்றும் 48 கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி அய்யூா் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது பொதுமக்கள் கூறியதாவது: பெட்டமுகிளாலம் ஊராட்சி மற்றும் 42 கிராமங்களில் விளையும் பயிா்கள் பீன்ஸ், தக்காளி, ரோஸ், சாமந்தி போன்ற பணப் பயிா்கள் தண்ணீா் இன்றி வாடுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு ஏக்கா் பீன்ஸ், தக்காளி சாகுபடி செய்ய ரூ. 1 லட்சமும், சாமந்தி, ரோஸ் போன்ற பூ வகைகளை பயிா் செய்ய ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இவை அனைத்தும் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் வாடியுள்ளன. சுமாா் 2,000 ஏக்கா் பணப் பயிா்கள் நீரின்றி அழியும் நிலை உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 25 கோடியாகும். எனவே பயிா்களைக் காப்பாற்ற கிராமத்தில் உள்ள கிணற்றைத் தூா்வாருவதோடு தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். கனரக இயந்திரங்களை கிராமங்களுக்குள் செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும். அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் வரும் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளோம் என்றனா்.

தொடா்ந்து அவா்கள் வனத்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். பட வரி... வனத்துறையினரைக் கண்டித்து தேன்கனிக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com