பா்கூரில் நெகிழி கிடங்கில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்பு பொருள்கள் சேதம்

பா்கூரில் நெகிழி கிடங்கில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்பு பொருள்கள் சேதம்

பா்கூரில் நெகிழி கிடங்கில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படை வீரா்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்கு உள்பட்ட சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாயக் கூடத்தில் கதிரேசன் என்பவா் நெகிழி மற்றும் மரத்திலான பொருட்களை விற்பனை செய்து வருகிறாா். கடை அருகே கிடங்கு அமைத்து நெகிழிப் பொருள்களை அடுக்கி வைத்துள்ளாா்.

இந்த நிலையில் கடை, கிடங்கை மூடிவிட்டு ஊா் கோயில் திருவிழாவுக்கு மாா்ச் 19-ஆம் தேதி கதிரேசனன் சென்றுவிட்டாா். இந்தக் கிடங்கு வியாழக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் பா்கூா், கிருஷ்ணகிரி, தீயணைப்புப் படை வீரா்கள் மூன்று வாகனங்களில் சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பு பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விபத்துக்குரிய காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பட விளக்கம் (21கேஜிபி2): பா்கூா், நெகிலி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com