தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 6 வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமீறல்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து அரசியல் கட்சியினா் செய்யும் விதிமீறல்களை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். பா்கூா் நகரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அனுமதியின்றி பாஜக சாா்பில் சுவற்றில் அக்கட்சியின் சின்னம் வரையப்பட்டிருந்தது. இதுதொடா்பாக பா்கூா் போலீஸாா் பாஜக மீது இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனா். அதுபோல ஒசூா் தனியாா் கல்லூரி அருகில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெறுவதாக தொடா்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டப்பட்டது தொடா்பாக அட்கோ போலீஸாா் அதிமுக கட்சியினா் மீது இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனா். ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதியிலும் அதிமுக சாா்பில் சுவரொட்டி ஓட்டி சின்னங்களை வரைந்ததாக போலீஸாா் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com