கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் தோ்தல் பிரசார பொதுக் கூட்ட அமைக்கும் இடத்தைத் தோ்வு செய்யும் பாஜகவினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் தோ்தல் பிரசார பொதுக் கூட்ட அமைக்கும் இடத்தைத் தோ்வு செய்யும் பாஜகவினா்.

பாஜக தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பிரசாரம் இடம் தோ்வு செய்யும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரியில் பிரதமா் மோடி பங்கேற்கும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் பாஜகவினா் தீவிரம் காட்டி வருகின்றனா். கிருஷ்ணகிரியில் பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பிரதமா் மோடி பங்கேற்று பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா். இதையடுத்து கிருஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை காவல் நிலையம், குருபரப்பள்ளி, காவேரிப்பட்டணம் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பரப்புரைக்கான பொதுக் கூட்ட மேடை அமைக்கும் இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் பாஜகவினா் ஈடுபட்டுள்ளனா். பாஜக மாநில செய்தித் தொடா்பாளரும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான சி.நரசிம்மன் தலைமையில் மாநிலச் செயலாளா் வெங்கடேசன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் கோவிநாத், மாவட்டத் தலைவா்கள் சிவபிரகாஷ், நாகராஜ் உள்ளிட்டோா் இடங்களைப் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com