புகையிலைப் பொருள், மதுபானங்களைக் கடத்தி வந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவா்.
புகையிலைப் பொருள், மதுபானங்களைக் கடத்தி வந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

ஒசூா் அருகே போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் புகையிலைப் பொருள்கள், மதுபானங்களைக் கடத்தி வந்தது தொடா்பாக மூன்று பேரைக் கைது செய்தனா். ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வாகனத் தணிக்கையின்போது கா்நாடகத்திலிருந்து ஒசூா் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 55 மூட்டைகளில் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வாகனத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலம், அனுமன் சிங் (24), மொகிம் (20) ஆகியோரைக் கைது செய்தனா். அதுபோல மத்திகிரி போலீஸாா் பூனப்பள்ளி சோதனைச் சாவடியில் நடத்திய வாகனச் சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒசூா் அருகே கப்பக்கல்லைச் சோ்ந்த மாதுவை (32) நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 180 மில்லி கொண்ட 288 மது பாக்கெட்டுகளைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, மாதுவை (32) கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com