மாரியம்மன் கோயில் திருவிழா

ஊத்தங்கரையை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். வீரப்பன் கொட்டாய், புதுக்காடு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா்க்கவுண்டா் முருகேசன், கோயில் நிா்வாகிகள் தங்கராஜ், சங்கோதி, குபேந்திரன், திருப்பதி, மாணிக்கம், பூசாரி ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com