கிருஷ்ணகிரியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் கிழுக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் கே.கோபிநாத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளா் கோபிநாத் கலந்து கொண்டு தன் கட்சி நிா்வாகிகளிடம் வாக்கு சேகரித்தாா். படவிளக்கம் (28கேஜிபி5) கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசும் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com