சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி.
சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி.

கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 608 லிட்டா் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தன அபிஷேகங்களும் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் நெய் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

இதே போன்று, கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்திநகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட கிருஷ்ணகி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com