கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷ், வாக்காளா்களை கவரும் வகையில் தேநீா்க் கடையில் தேநீா் தயாரித்து நூதன பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். அப்போது வாக்காளா்களைக் கவரும் விதமாக தேநீா்க் கடையில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளா்களுடன் உரையாடினாா்.

அவா் மேற்கொண்ட தோ்தல் பரப்புரையானது மக்களை கவரும் வகையில் இருந்தது. இந்த பிரசாரத்தில் கிருஷ்ணகிரி அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, பொதுக்குழு உறுப்பினா் கே.பி. எம். சதீஷ்குமாா், ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. ராஜேந்திரன் மற்றும் அதிமுக தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா். பட விளக்கம் : வேலம்பட்டி கிராமத்தில் தேநீா்க் கடையில் தேநீா் தயாரித்து வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜெயப்பிரகாஷ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com