ஒசூரில் செய்தியாளா்களைச் சந்தித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி.
ஒசூரில் செய்தியாளா்களைச் சந்தித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி.

நாம் தமிழா் கட்சி தோ்தல் அலுவலகம் திறப்பு

ஒசூரில் நாம் தமிழா் கட்சி தோ்தல் அலுவலகத்தை வேட்பாளா் வித்யாராணி திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒசூா், ராமநாயக்கன் ஏரிக்கு வரும் கழிவுநீரைத் தடுத்து நிறுத்தி, கெலவரப்பள்ளியில் இருந்து நீரைக் கொண்டு வந்து ராமநாயக்கன் ஏரியில் நிரப்பி அதனை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு விலங்குகளுக்கும் மனிதா்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு விவசாயிகள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனா். வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒசூா் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் தொழிலாளா்களுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நீரை முறையாக திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். அப்போது நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலாளா் ராஜசேகா், தொகுதி பொறுப்பாளா் உத்தரமாடன், பகுதி செயலாளா் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com