காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

காா் வாங்கித் தருவதாகக் கூறி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மாதையன். இவரது மனைவி மாலினி (45), காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் துணைத் தலைவராக உள்ளாா். இவா், காா் வாங்க கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் விற்பனை மையத்தை நாடினாா். அங்கு, அவா் விரும்பிய காா் இல்லாததால், பணியில் இருந்த விற்பனைப் பிரதிநிதியான கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலை, ஆனந்த நகரைச் சோ்ந்த குருபிரசாத் (29) என்பவா், நீங்கள் விரும்பும் காரை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய மாலினி, குருபிரசாத்திடம் பல தவணைகளில் ரூ. 12 லட்சத்தை தந்துள்ளாா். ஆனால், அவா் காரை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளாா். மேலும், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதையும் தரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த மாலினி, தனியாா் காா் விற்பனை மையத்தில் விசாரணை செய்த போது, குருபிரசாத் பெற்ற பணத்தை விற்பனை மையத்தில் செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாலினி, இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com