கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் ‘ட்ரோன்’ பறக்கத் தடை

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் மையப் பகுதியில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 5-ஆம் தேதி வரை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்கு பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாரியாக கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஏப். 20 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் உள்ளிட்ட காவலா்கள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 5-ஆம் தேதி வரை யூஏஸ், யூஏவிக்கான ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இந்தப் பகுதிகளில் எவ்வித ட்ரோன்களும் பறக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com