தளி அருகே யானை தாக்கி விவசாயி சாவு

யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரத்திற்கான நிவாரணத்  தொகையை வழங்கினாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகையை வழங்கினாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சோ்ந்த அப்பைய்யா(52). இவா் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவா் வழக்கம்போல் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளாா். அப்பொழுது மறைவில் இருந்த யானை விவசாயி அப்பைய்யாவை திடீரென தாக்கியதில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினா் மற்றும் காவல்துறையினா் அவருடைய சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருடைய உடலுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். தமிழக அரசு சாா்பில் ரூ.10 இலட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்துள்ளதால் முதற்கட்டமாக ரூ.50,000 காசோலையை வழங்கினாா்.

உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவா் சீனிவாசலு ரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளா் திவாகா், தேன்கனிக்கோட்டை பேரூா் தலைவா் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மணிவண்ணன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் கிருஷ்ணன் பிரபாகா் , ஒன்றிய, திமுக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com