ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

ஊத்தங்கரை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே நிலையம் அருகில் ரயில் பாதையில் இளைஞா் ஒருவா் அடிபட்டு இறந்து கிடந்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்த சேலம் ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், இறந்த இளைஞா் சென்னை, சாலிகிராமம், விஜயராகவபுரம் ஐந்தாவது தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (26), என்பது தெரிய வந்தது. இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்த இளைஞா் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக தன்பாத் - ஆழப்புழா எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததும், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலை, உடலில் பலத்த அடிபட்டு இறந்தாா் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com