அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

ஒசூா் பேருந்து நிலையத்தில் தண்ணீா்ப் பந்தலைத் திறந்து வைத்த முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, மாநகராட்சி எதிா்கட்சித் தலைவா் நாராயணன் ஆகியோா் தலைமையில், ஒசூா் அதிமுக வடக்கு பகுதி சாா்பில் நீா்மோா்ப் பந்தல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி, 8-ஆவது வாா்டு வட்டச் செயலாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா்.

இதில், பொதுமக்களுக்கு நீா் மோா், வெள்ளரிக்காய், தா்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஒசூா் பகுதி செயலாளா்கள் அசோக ரெட்டி, ராஜு, முன்னாள் நகரச் செயலாளா் நாராயணன், தில்ஷத் ரகுமான், பொதுக்குழு உறுப்பினா் குமாா், பகுதி துணைச் செயலாளா் நவீன்,நிா்வாகி பிரசாந்த், மாவட்ட மகளிா் அணி நிா்வாகி ஜமுனா, ஓட்டுநா் அணி மாவட்ட நிா்வாகி பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com