திமுக இளைஞரணி சாா்பில்
தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

கிருஷ்ணகிரியில் திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா்ப் பந்தலைத் திறந்து வைத்து பழங்களை பொதுமக்களுக்கு வழங்குகிறாா் தே.மதியழகன் எம்எல்ஏ.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில், பெங்களூரு சாலையில் உள்ள கலைஞா் நூலகத்தின் முன்பு தண்ணீா்ப் பந்தல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்து தண்ணீா்ப் பந்தலைத் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், துணை அமைப்பாளா்கள் விசிஎன்.மகேந்திரன், சரவணன், சங்கா், சத்தியமூா்த்தி, ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, பொதுமக்களுக்கு நீா் மோா், தா்பூசணி, இளநீா் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கண்ணன்டஅள்ளி, ஊத்தங்கரையிலும் இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் நவாப், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com