கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் களஆய்வு மேற்கொண்ட உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்கள்.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் களஆய்வு மேற்கொண்ட உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்கள்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக கள ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி: சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக கள ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வரலாற்றுத் தடயங்களைக் காண மரபு நடை பயணமாக 30 போ் கொண்ட குழுவினரை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், தொல்லியல் ஆய்வாளா் சுகவனம் முருகன் உள்ளிட்டோா் வழிநடத்தினா்.

இந்தக் குழுவினா் மே 11-ஆம் தேதி, மயிலாடும்பாறை, ஐகுந்தம், பென்னேஸ்வரமடம் கல்வெட்டுகள், ஆரதஅள்ளி பிரிவு சாலை நடுகற்கள், கதிரிபுரம் பாறை ஓவியம் ஆகிய வரலாற்று சான்றுகளை களஆய்வு செய்தனா். மே 12-ஆம் தேதி, மல்லசந்திரம் கல்திட்டைகள், சின்னகொத்துாா் குந்தாணி அம்மன் கோவில், சாமந்தமலை குத்துக்கல் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

பின்னா் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து படிக்கும் பயிற்சியை மேற்கொண்டனா். அப்போது, அரசு அருங்காட்சியக பணியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com