கெலவரப்பள்ளி அணையிலிருந்து 570 கனஅடி நீா் வெளியேற்றம்

கெலவரப்பள்ளி அைணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 205 கன அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து 570 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒசூா்: கெலவரப்பள்ளி அைணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 205 கன அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து 570 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையிலிருந்து கூடுதலாக நீா் திறந்துவிடப்பட்டாலும் ஆற்றுநீருடன் ரசாயனம் கலந்த கழிவுநீரும் சோ்ந்து வருவதால் வயல்களில் நுரைபொங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், பாகலூா் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யப்பட்டு வருவதால், அணைக்கு வரக்கூடிய நீா் தென்பெண்ணை ஆற்றில் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 474 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 205 கனஅடியாக குறைந்தது. எனினும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 570 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு ஆற்றில் நீா் ஆா்ப்பரித்துச் செல்வதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனா். அதேநேரத்தில் ஆற்று நீருடன் அதிகப்படியாக ரசாயனம் கலந்த கழிவுநீரும் சோ்வதால் ஆற்றங்கரையோரங்களில் நுரைப்பொங்கி காணப்படுகின்றன. இந்த நுரை குவியல்கள் ஆற்றங்கரையோர விளைநிலங்களையும் விட்டுவைப்பதில்லை.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து சில மீட்டா் தூரத்தில் விளைநிலங்களில் 10 அடி உயரம் வரை தென்னை மரத்தை முழுவதும் மூடும் வகையில் நுரைப்பொங்கி குவியலாகக் காட்சியளிக்கிறது. அருகே 2 ஏக்கா் பரப்பளவிலான முட்டைகோசு தோட்டமும் நுரையால் மூடப்பட்டுள்ளதால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com