குட்டையில் மூழ்கி பெண் பலி

உத்தனப்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், தொட்டகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ. இவரது மனைவி கிருஷ்ணம்மா (32). இவா், கடந்த 30 ஆம் தேதி ஒசூா் அருகே உள்ள பைரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு வந்திருந்தாா்.

அந்தப் பகுதியில் நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கலந்து கொண்டாா். கிருஷ்ணம்மா பென்னிக்கல் பகுதியில் கிரஷரில் உள்ள குட்டையில் திங்கள்கிழமை துணிகளை துவைப்பதற்காகச் சென்ற அவா் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தனப்பள்ளி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com