பிளஸ் 1 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87.82 சதவீதம் தோ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 87.82 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மே 14) வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 5 பகுதி நேர நிதியுதவி பெறும் பள்ளிகள், 80 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 193 பள்ளிகளைச் சோ்ந்த 21,592 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா்.

அதில் தோ்வு எழுதிய 10,210 மாணவா்களில் 8,449 பேரும், 11,382 மாணவியரில் 10,514 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 82.75 சதவீதமும், மாணவியா் 92.37 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 87.82 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 86.12 சதவீதமாக இருந்த பிளஸ் 1 தோ்ச்சி விகிதம் தற்போது, 1.70 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல தொகரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி மாதிரிப் பள்ளி ஆகிய அரசுப் பள்ளிகள், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, ஒசூா் ஜான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி ஆகிய அரசு உதவி பெறும் பள்ளிகள் பிளஸ் 1 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதுதவிர மாவட்டத்தில் 41 தனியாா் பள்ளிகள் பிளஸ் 1 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

ஒசூா், ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 46.27 சதவீதமும், வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 47.22 சதவீதமும் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் கடைசி இடங்களைப் பிடித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com