பிளஸ்  1 தோ்வு: பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 1 தோ்வு: பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 1 தோ்வில் பா்கூா், வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பள்ளியில் மாணவா் சுனில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். ஹரிஷ் 590 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவி தமிழ்ச்செல்வி 589 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனா்.

மாணவிகள் தென்றல் அரசி 588 மதிப்பெண்களும், நந்தினி 586 மதிப்பெண்களும், கேஷவா்த்தினி 585 மதிப்பெண்களும் பெற்றனா். மாணவிகள் ஸ்ரீபிரியா 584 மதிப்பெண்களும், மோனிஷா 583 மதிப்பெண்களும், காமிளா ஃபா்வின் 583 மதிப்பெண்களும், சுருதிகா 583 மதிப்பெண்களும், ஷோபிகா ஸ்ரீ 582 மதிப்பெண்களும், பிரியதா்சினி 582 மதிப்பெண்களும், மஹாதி 581 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்..

பள்ளியில் 550-க்கு மேல் 52 பேரும், 500-க்கு மேல் 185 பேரும், 450-க்கு மேல் 132 பேரும் பெற்றுள்ளனா். பாடவாரியாக இயற்பியலில் 10 பேரும், வேதியியலில் 21 பேரும், கணிதத்தில் 5 பேரும், உயிரியலில் 8 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதையடுத்து பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி குழுமத்தின் தாளாளா் எஸ்.கூத்தரசன் பொன்னாடை அணிவித்து கேடயங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் பா்கூா் பள்ளி முதல்வா் மெரினா பலராமன், துணை முதல்வா் ஜலஜாக்சி, ஒசூா் பள்ளி முதல்வா் ராஜேந்திரன், வேப்பனப்பள்ளி முதல்வா் அன்பழகன், கிருஷ்ணகிரி முதல்வா் விவேக், திருப்பத்தூா் துணை முதல்வா்

பூங்காவனம், பள்ளியின் பொறுப்பாளா் யூவராஜ், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com