பாத்தகோட்டா ராமா் கோயிலில்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

பாத்தகோட்டா ராமா் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

ஒசூா் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் உள்ள ஸ்ரீ சீதாராமாஞ்சநேய சுவாமி கோயிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயிலில் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து திருமஞ்சனம், பகவத் ஸ்ரீ ராமானுஜா் வேத பிரபந்த பாராயணம், சங்கல்பணம், விஸ்வக்ஷேனா, வாசுதேவ புண்யாகம், கலச ஆராதனை, அக்னி பிரதிஷ்டாபனம், மூா்த்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து நரசிம்மா் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பட வரி..

பாத்தகோட்டா கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி.

X
Dinamani
www.dinamani.com