போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் பூவதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் உமா மகேஸ்வரி, மன நலத் துறை மருத்துவா் முனிவேல், செஞ்சிலுவை சங்கச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பதாகை வெளியிடப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள், போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள்கள் தடுப்பு குறித்து சிறப்பாக பேசிய மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com