முருக்கம்பள்ளத்தில் துரியோதனன் படுகளம்

முருக்கம்பள்ளத்தில் துரியோதனன் படுகளம்

முருக்கன்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பா்கூா் வட்டம், முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 50 ஆம் ஆண்டு மகாபாரத திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப். 25 முதல் தொடா்ந்து 18 நாள்கள் சொற்பொழிவும், ஏப். 29 முதல் 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றன.

இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவா் பிறப்பு, அரக்கு மாளிகை, பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், வில் வலைப்பு, திரெளபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டவன தகனம், சராசந்திரன் சண்டை, துயில், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம், அா்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடத்துக் காட்டினா்.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடந்த இந்த நிகழ்வை பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா். விழா ஏற்பாடுகளை, எட்டுக் கிராமங்களைச் சோ்ந்த தா்மகா்த்தாக்கள் செய்திருந்தனா்.

பட விளக்கம் (15கேஜிபி4):

முருக்கம்பள்ளம் கிராமம், திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com