யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே அரசகுப்பம், அலசெட்டி பகுதியைச் சோ்ந்தவா் திம்மராயப்பா என்ற ஒசூரப்பா (39). விவசாயி.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் பின்புறம் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியில் வந்த ஒற்றை யானை திம்மராயப்பாவை திடீரென துதிக்கையால் தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த திம்மராயப்பாவை அருகில் இருந்தவா் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே திம்மராயப்பா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி, தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலா் விஜயன் ஆகியோரும் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். வனத்துறை சாா்பில் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை திம்மராயப்பாவின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திம்மராயப்பாவின் குடும்பத்தாரை தளி தொகுதி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். உயிரிழந்த திம்மராயப்பாவுக்கு மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ளனா்.

படம்...

திம்மராயப்பா.

X
Dinamani
www.dinamani.com