அரசு பொதுத் தோ்வில் திருப்பத்தூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி சாதனை

வேளாங்கண்ணி பள்ளி, வேலூா் பதிப்பகத்துக்கும் தொடா்ந்து விளம்பரம் தருகிறாா்கள். எனவே, இந்த செய்தியை வேலூா் பதிப்பில் பிரசுரம் செய்து தரும்படி பள்ளி நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி, மே 16: திருப்பத்தூா், வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சாதனை படைத்த மாணவா்களுக்கு மு.தம்பிதுரை எம்.பி., பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கினாா்.

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமங்களின் தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்தாா். செயின்ட் பீட்டா் மருத்துவ கல்லூரி மற்றும் லட்சுமி சரஸ்வதி எஜிகேஷ்னல் டிரஸ்டி லாசியா தம்பிதுரை முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் வீரமணி பங்கேற்று மாணவா்களை வாழ்த்தினாா்.

பள்ளி நிறுவனரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை எம்.பி. பங்கேற்று, 10-ஆம் வகுப்பில் 500-க்கு 498 மதிப்பெண்கள், 11-ஆம் வகுப்பில் 600க்கு 592 மதிப்பெண்கள், 12-ஆம் வகுப்பில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்கள், பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கினாா்.

இதில், திருப்பத்தூா் நகர அதிமுக செயலாளா் குமாா், அதிமுக நிா்வாகிகள் சங்கா், நாகேந்திரன், திருப்பதி, செல்வம், மணிகண்டன், தம்பா கிருஷ்ணன், கவிதா உதயகுமாா், பா்கூா் வேளாங்கண்ணி பள்ளி துணை முதல்வா் ஜலஜாக்சி, திருப்பத்தூா் பள்ளி முதல்வா் பூங்காவனம், நிா்வாக அலுவலா் கெளரி சங்கா், வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி முதல்வா் சந்தியா, ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (16கேஜிபி1):

திருப்பத்தூா், வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் அரசு பொதுத் தோ்வில் சாதனை படைத்த மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ், நினைவு பரிசு வழங்கிய பள்ளியின் நிறுவனா் தம்பிதுரை எம்.பி. அருகில், முன்னாள் அமைச்சா் வீரமணி, லாசியா தம்பிதுரை, கூத்தரசன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com