ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஒசூா்,மே 16: ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் குமாா் (29). தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திர மாநிலம், குப்பம் வட்டம், சித்தகுப்பம் கிராமத்துக்கு தோ்தலையொட்டி வாக்களிப்பதற்காகச் சென்றாா்.

15-ஆம்தேதி அவா் மீண்டும் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றதை அறிந்தாா். இதுகுறித்து குமாா், ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com