கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

கிருஷ்ணகிரி, மே 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 11.84 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவா்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, முதல்வரின் விடியல் பயணத் திட்டம் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11.84 கோடி மகளிா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்துள்ளனா். இந்தக் கட்டணமில்லா பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 888 வரை சேமிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com