கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்று வந்த கோடைகால பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவுபெற்றது.

கிருஷ்ணகிரி விளையாட்டுத் திடலில் கோடைகால பயிற்சி முகாம் ஏப். 29 முதல் மே 15 வரை நடைபெற்றது. இதில், தடகளம், ஹேண்ட்பால், ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் விளையாட்டில் ஆா்வம் உள்ளவா்கள் 175 பெண்கள் உள்பட மொத்தம் 437 போ் முகாமில் பயிற்சி பெற்றனா். ஒசூா், ஊத்தங்கரை மினி விளையாட்டு அரங்கிலும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா் கல்பனா தலைமை வகித்தாா்.

மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், கால்பந்து பயிற்றுநா் சுப்பிரமணி, தொலைதொடா்புத் துறை ஒப்பந்ததாரா் சபீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சீருடை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பட விளக்கம் (16கேஜிபி4):

கிருஷ்ணகிரி மாவட்ட திடலில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com