பிளஸ் 2 தோ்வில் சாதனை படைத்த மாணவிக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித்தொகை

பிளஸ் 2 தோ்வில் சாதனை படைத்த மாணவிக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித்தொகை

ஒசூா், மே 16: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள அத்வைத் இன்டா்நேஷ்னல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற மாணவி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததை அடுத்து அந்த மாணவிக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில், ரூ. 20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இப் பள்ளி மாணவி துா்காஸ்ரீ 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாணவிக்கு பள்ளி நிறுவனத் தலைவா் அஸ்வத் நாராயணன், தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் ஆகியோா் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். மாணவியின் பெற்றோரையும் பாராட்டினா். மாணவி உயா்கல்விப் பயில ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 20 லட்சம் கல்வி உதவித்தொகை பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவியிடம் வழங்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் மாணவி துா்காஸ்ரீ கூறியதாவது:

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பிடித்தபோது ரூ. 1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கி பள்ளி நிா்வாகம் என்னை ஊக்கப்படுத்தினா். தற்போது பிளஸ் 2 தோ்விலும் முதலிடம் பிடித்துள்ளேன். இதற்கு காரணமான தலைமை ஆசிரியை, ஆசிரியா்களுக்கு நன்றி என்றாா்.

பள்ளி நிறுவனத் தலைவா் அஸ்வத் நாராயணன் கூறியதாவது:

பள்ளியில் ‘சோ்மன்ஸ் ஸ்காலா்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், எங்கள் கல்வி நிறுவனம் சாா்பில் முதலிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் சாதனை படைத்தால் ரூ. 51 லட்சமும், மாநில அளவில் சாதனை படைத்தால் ரூ. 35 லட்சமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதன்முதலாக மாணவி துா்காஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து ரூ. 20 லட்சம் கல்வி உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றுள்ளாா் என்றாா்.

விழாவில் நிறுவனத் தலைவா் அஸ்வத் நாராயணன், பள்ளி நிா்வாக இயக்குநா் பானு பிரகாஷ், துணை முதல்வா் பவானி, மாணவியின் பெற்றோா் ரவிக்குமாா், புஷ்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட வரி...

ஒசூரில் 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த துா்காஸ்ரீ க்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்த பள்ளி நிறுவனத் தலைவா் அஸ்வத் நாராயணன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com