மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஒசூா்,மே 16: தளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தளி அருகே உள்ள உனிசேநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (32). தொழிலாளி. அவா் ஒன்னட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டும் வீட்டில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்பொழுது தூண் அமைப்பதற்காக இரும்புக் கம்பியை எடுத்து வந்தபோது மின்சார வயரில் கம்பி உரசியது. அதில் மூா்த்தி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com